13:31

இசையுடன் என் முதல் பயணம்

Posted by மதியின் வலையில்

வலையுலகத்தில் எனக்கு சக பதிவர்களுடன் அவ்வளவாக (இல்லை இல்லை, எவருடனும் ) பழக்கம் இல்லை. ஆனால் நிறைய நண்பர்களுடைய பதிவினை தொடர்ந்து படிப்பேன். ஒவ்வொருவருடைய பதிவிலும் ஒவ்வொரு விதமான ஈர்ப்பு இருக்கும். இப்படி இருக்க, சமீப காலமாக எனக்கும் வலையுலகத்தில் தோன்றியவற்றை பதிவிடலாம் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் எதைப்பற்றி எழுதுவது???

இப்படி சிந்தித்து சிந்தித்து, சில திங்கள்கள் கழித்து இன்று தான் இந்த தலைப்பு எனக்கு தோன்றியது. உடனே ஏன் காலந்தாமதிக்க வேண்டுமென்று, இன்றிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தேன். ஆரம்பித்துவிட்டேன்.

குறிப்பு : எனது முதல் பதிவு இது. ஏதேனும் குறைகள் இருந்தால் தயவு செய்து மின்னஞ்சல் மூலமாகவோ இல்லை பின்னூட்டம் மூலமாகவோ தெரிவியுங்கள். நன்றி.

[source : wikipedia]

"இசையுடன் எனது முதல் பயணம்" - தலைப்பை பார்த்து ஏதும் தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். எனக்கு இசையை பற்றி ஒன்றும் தெரியாது ("பின்னே எதுக்கு இதைபத்தி எழுதுற" - இப்படி யாரோ யோசிக்குறது கேட்குது. எனக்கு வேற தலைப்பு தெரியலையே. ) எனக்கு இசையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள் ஆவலை தவிர பயிற்சி ஏதும் இல்லை.

இப்படி இருக்க இசையை ஏன் தேர்ந்தெடுத்தேன்? அது ஒரு சின்ன கதை. (யாரும் தூங்கிடதீங்க. தயவு செய்து முழுதும் படித்துவிட்டு அப்புறம் போய் தூங்கலாம்)

சிறு குழந்தையிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்டால்.......

(1). மருத்துவராக வேண்டும் - (உடல்நிலை சரியில்லை-னா மருத்துவரிடம் ஊசி போடுவார்கள். அதனால் இவர்கள் பெரியவர்களாகி எல்லோருக்கும் ஊசி போடுவார்களாம். )
(2). ஆசிரியராக வேண்டும் - இதற்கான காரணம் உங்கள் அனைவருக்கும் அறிந்ததே... நீங்களே இப்படி நினைத்திருக்கலாம். :)

இதுபோல் பலவற்றை கூறிக்கொண்டே இருப்பார்கள். பொறியாளராக, சைக்கிள் பழுதுபாற்பவராக, ஆட்டோ ஓட்டுனராக, ஆராய்ச்சியாளராக... இப்படி பல உண்டு....

சரி, சிறுவயதில் அறியாமை காரணமாக இப்படி ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இதோ அரை ஆயுள் முடிந்துவிட்டது. ஏதேனும் ஆசை எனதுள்ளும் எழுந்துகொண்டே இருக்கிறது. அதை பிறகு பார்க்கலாம்.
[source : wikipedia]

ஆனால் இசையின் மேல் எழுந்த இந்த ஆசை நீண்ட நாளாக நிலைத்து விட்டது.


என்னுடைய இந்த ஆசை எங்கிருந்து ஆரம்பித்தது என்று எழுதலாம் என்றால் ஏற்கெனவே இந்த பதிவு நீண்டு விட்டது. அதனால் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் இடுகிறேன்.

[source : wikipedia]

நன்றி....

--மதி